#BREAKING நாளை முதல் அதிரடி மாற்றம்... ஆவின் பால் பொருட்கள் விலை தடாலடி உயர்வு...!
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 100 கிராம் ஆவின் நெய் பாட்டிலின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உபபொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 230-க்கும் மேற்பட்ட பால் உபபொருட்களை விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம், அவற்றில் 67 பொருட்களின் விலையை உயர்த்த உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் வாங்கும் நெய், வெண்ணெய், மோர், லஸ்ஸி, தயிர், குக்கீஸ் எனப்படும் பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் ஆவின் இனிப்புகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!
அதன்படி, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு விவரம் பின்வருமாறு:
-
100 கிராம் ஆவின் நெய் பாட்டிலின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆக அதிகரித்துள்ளது.
-
அரை லிட்டர் ஆவின் நெய் விலை ரூ.30 உயர்ந்து ரூ.390 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
100 கிராம் ஆவின் நெய்யின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரை கிலோ ஆவின் வெண்ணெய் விலை ரூ.45 உயர்ந்து ரூ.320 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், ஆவின் இனிப்புகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 100 கிராம் ரசகுல்லாவின் விலை ரூ.5 அதிகரித்து ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 கிராம் ரசகுல்லாவின் விலை ரூ.90-லிருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கால் கிலோ குலாப் ஜாமுன் மற்றும் கால் கிலோ பால்கோவாவின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. கால் கிலோ மைசூர்பாக்கின் விலையும் ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 200 மில்லி ஆவின் லஸ்ஸியின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மில்லி அளவிலான 10 வகை மில்க் ஷேக்குகளின் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் கப் தயிரின் விலை ரூ.5-லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ தயிரின் விலை ரூ.120-லிருந்து ரூ.130 ஆக அதிகரித்துள்ளது.
மோர் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 மில்லி மோரின் விலை ரூ.8-லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் ஃபேட் பாட்டிலில் அடைக்கப்பட்ட மோரின் விலை ரூ.12-லிருந்து ரூ.14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, மேலும் பல்வேறு பால் உபபொருட்களின் விலைகளையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பண்டிகைக் காலம் நெருங்கும் நேரத்தில் ஆவின் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் அதிகம் வாங்கப்படும் நெய் மற்றும் இனிப்புகளின் விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: தேனி சிறையில் பேரதிர்ச்சி... காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்... நடந்தது என்ன?