×
 

“எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்போரை இருகரம் கூப்பி வரவேற்போம்!” - ஆர்.பி. உதயகுமார் அதிரடி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டை விளக்கினார், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார்

அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கானக் கூட்டணி குறித்துப் பேசிய அவர் பின்வருமாறு குறிப்பிட்டார், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர்களை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம். தமிழகத்தை திராவிட மாடல் என்ற பெயரில் ஏமாற்றும் திமுக ஆட்சியை அகற்ற, அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் போதைப் பொருள் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஆறரை கோடி வாக்காளர்களின் மனசாட்சி - எடப்பாடியார் என்கிற அரசாட்சி என்ற தனது வைரல் வசனத்தையும் அவர் மீண்டும் நினைவுகூர்ந்தார்.

இதையும் படிங்க: இளவரசர் வரும் வரை வாடிவாசல் திறக்கக் கூடாதா? உதயநிதியை சீண்டிய ஆர்.பி. உதயகுமார்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  உள்ளிட்டப் புதியக் கட்சிகள் குறித்து எழுப்பப்பட்டக் கேள்விகளுக்கு, யாராக இருந்தாலும் அதிமுகவின் தலைமையையும், எடப்பாடியாரின் ஆளுமையையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியம்" என்று மர்மமானப் புன்னகையுடன் பதிலளித்தார்.

இதையும் படிங்க: "அப்பன் வீட்டு பணமல்ல": பொங்கல் பரிசு விவகாரத்தில் உதயநிதியை சாடிய ஆர்.பி.உதயகுமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share