×
 

கிரிவலம் சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் விபத்தில் 3 பேர் பலி..!!

திருவண்ணாமலை கிரிவலம் சென்று வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை கிரிவலம் என்பது ஆன்மீக பக்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள மலையை வலம் வந்து சிவபெருமானின் அருள் கிடைக்க வேண்டுகின்றனர். இது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் புனிதப் பயணமாக விளங்குகிறது.

மார்ச் 2-ஆம் தேதி திங்கட்கிழமையான நேற்றைய தினம் பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு செய்தனர். குறிப்பாக இந்திர லிங்கம், அக்னி லிங்கம், ஈசான்ய லிங்கம் போன்ற அஷ்ட திக்கு பாலகர் கோயில்கள், திருவண்ணாமலை ராமண மகரிஷி ஆசிரமம் அருகே உள்ள இடங்கள் போன்ற புனித தலங்கள் பக்தர்களை ஆசீர்வதிக்கின்றன.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் ஒரு சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. கிரிவலம் சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர்கள் நான்கு பேர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலத்திற்கு சென்றுள்ளனர். கிரிவலத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டம் விட வேண்டாம்... மீறினால்..!! ரயில்வே கோட்டம் எச்சரிக்கை..!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று வழக்கறிஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலையிலிருந்து சென்னை சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தூரம் உள்ள கிணற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று வழக்கறிஞர்கள் உயிரிழந்த நிலையில் காணாமல் போன நபரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. 

இதையும் படிங்க: ஆந்திராவை உலுக்கிய பட்டாசு ஆலை விபத்து சம்பவம்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share