×
 

பட்டம் விட வேண்டாம்... மீறினால்..!! ரயில்வே கோட்டம் எச்சரிக்கை..!!

தண்டவாளங்களுக்கு அருகே பட்டம் விட வேண்டாம் என ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான ரயில்கள் மின்சாரத்தில் இயங்குவதால், தண்டவாளங்களுக்கு மேலே 25,000 வோல்ட் உயர் மின்னழுத்தத்தில் மின்சார கம்பிகள் இழுக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பிகளைத் தொடுவதோ அல்லது அருகில் செல்வதோ கூட உயிருக்கு ஆபத்தானது. பட்டம் விடும்போது, பட்டத்தின் நூல் இந்த உயர் மின்னழுத்தக் கம்பிகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

சாதாரண நூல் என்றாலும், குறிப்பாக சீன மஞ்சா பயன்படுத்தினால், அது மின்சாரத்தை நடத்தி உடனடியாக மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் பட்டம் விடுபவர் உயிரிழக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன.மேலும், பட்டத்தின் நூல் தண்டவாளத்தின் மீது விழுந்து சிக்கிக்கொண்டால், அது ரயிலின் பேண்டோகிராப் உடன் தொடர்பு கொள்ளும். இதனால் ரயிலின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, திடீரென ரயில் நின்று போகும்.

இது ரயில் சேவையை பெரிதும் பாதிக்கும். சில சமயங்களில் இதனால் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அறியாமல் தண்டவாளம் அருகே பட்டம் விடுவதால், அவர்களே முதலில் ஆபத்தில் சிக்குகின்றனர். ரயில்வே துறை இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சங்கராந்தி போன்ற பண்டிகைகளுக்கு முன்பாகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

ரயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டல்ல என்றும் தண்டவாளம் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இலை இரு தண்டனைகளுமே கொடுக்கப்படலாம் எனவும் சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையும் படிங்க: ஆந்திராவை உலுக்கிய பட்டாசு ஆலை விபத்து சம்பவம்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share