உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!
சென்னை பெரும்பாக்கத்தில் லோடு வேன் ஏறி இறங்கியதில் தாயும் மகளும் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில், குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கனரக வாகனங்கள் நகரப் பகுதிக்குள் காலை நேரத்தில் நுழைய தடை விதிக்கும் உத்தரவுகள் அமலில் உள்ளன. இந்த உத்தரவுகள் பெரும்பாலும் மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அல்லது போக்குவரத்து காவல் துறையால் வெளியிடப்படுகின்றன.
இதன் முக்கிய நோக்கம் காலை பீக் அவர் நேரத்தில் சாலைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதும், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதுமாகும். கனரக வாகனங்கள் பெரிய அளவில் இடம் ஆக்கிரமிப்பதால், சிறிய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பயணிக்கும் நேரத்தில் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
மேலும், இவை மெதுவாக செல்வதால் முழு சாலை போக்குவரத்தையும் முடக்கிவிடுகின்றன.சென்னை மாநகரத்தில் இந்த உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகர எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்... திமுக மாநாட்டுக்கு சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து..!!
இதில் தண்ணீர் லாரிகள் உட்பட அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் அடங்கும். விதிமீறினால் முதல் முறை ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்து 100 நாட்கள் வரை விடுவிக்காமல் வைத்திருத்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் நிகழ்த்த சாலை விபத்தில் தாயும் அவருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியும் உயிரிழந்த சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. லோடு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது kமோதியதில் தாய் லாவண்யா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி இனியா ஆகியோர் உடல் நசங்கி உயிரிழந்துள்ளனர். நிலைத்தடுமாறி கீழே விழுந்த போது இருவர் மீதும் லோடு வாகனம் ஏறி இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். காலை நேரத்தில் கனரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வரக்கூடாது என்ற உத்தரவு இருந்தும் விதிமுறைகள் மீறப்படுவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு சார்... யார் அந்த SIR.? சந்தேகத்தை கிளப்பிய வினோஜ் பி. செல்வம்..!!