நடிகர் ஆர்யா வீட்டில் ஐடி ரெய்டு.. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டால் அதிகாரிகள் அதிரடி சோதனை!!
சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஆர்யா நான் கடவுள், ஆரம்பம், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபலமானவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சையீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நடிப்பு மட்டுமல்லாது தொழிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சீ ஷெல் ஹோட்டல்களிலும் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’டிரஸைக் கழட்டுங்க’ பள்ளி சென்று திரும்பிய சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச புகைப்படம் - இருவரை புரட்டி எடுத்த பொதுமக்கள்...!
அண்ணா நகர், கீழ்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. மேலும், சென்னை தேனாம்பேட்டை பின்னி சாலையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மூன்று தலைமுறையை அழித்த கள்ளக்காதல்... 65 வயது பாட்டி முதல் 5 வரை குழந்தை வரை ஒரு குடும்பமே காலி...!