"புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!
நடிகர் தனுஷ் தனது தலைமை நற்பணி மன்றத்தின் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 40 மாவட்டங்களாக பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்
நடிகர் தனுஷ் தனது தலைமை நற்பணி மன்றத்தின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைப் பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் ரசிகர் மன்றத்தைக் கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு எனத் தொகுதி வாரியாக இரண்டாகப் பிரித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த அதிரடி மறுசீரமைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் Vs தனுஷ்: தமிழக அரசியலில் உருவாகும் புதிய போட்டி! ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர் மன்ற அமைப்புகள் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்குப் புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கைப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தவும் தலைமை மன்றத்தில் இருந்து கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத் தொகுதிகள்:
கோவை வடக்கு மாவட்டம்: கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகள்.
கோவை தெற்கு மாவட்டம்: கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய தொகுதிகள்.
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் பலர் அடுத்தடுத்து அரசியல் பயணத்தைத் தொடங்கி வரும் சூழலில், நடிகர் தனுஷும் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் கட்சிகளின் உட்கட்டமைப்பிற்கு இணையான முறையில் மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளாகப் பிரித்து மறுசீரமைத்து வருகிறார்.
உறுப்பினர் சேர்க்கையை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தும் தனுஷின் இந்த அதிரடி நகர்வு, அவரது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான திட்டமிடலா என்ற விவாதத்தைத் திரை உலகிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் சூடாகக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் அரசியல் பயணம் குறித்து ஜோதிடர் கணிப்பு..!! திமுக, அதிமுகவுக்கு சவாலா?