×
 

விஜய்க்கும் வேதனை இருக்கும்… அவருக்கு என்ன பிரச்சனையோ! ஆதரவாக பேசிய சனம் செட்டி…!

கரூர் சம்பவத்தால் விஜய்க்கும் நிச்சயம் வேதனை இருக்கும் என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நாற்பது பேர் பலியாகி இருந்தனர். இன்று மேலும் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது விஜய் பதில் சொல்லாமல் புறப்பட்டதாகவும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களை விஜய் வந்து பார்க்கவில்லை என்ற விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜய் கரூரிலிருந்து கிளம்பிய போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தது குறித்து நடிகை சனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் பதற்றத்தில், பயத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றதாக தெரியவில்லை என்றும் என்ன நடக்கிறது, என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டது போல தெரிந்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க: ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க! வதந்திகள் குறித்து முதல்வர் வேதனை...!

என்ன பாக்க வந்தவங்களுக்கு இப்படி ஆகிடுச்சே… என விஜய்க்கு நிச்சயம் வேதனை இருக்கும் என்றும் அவருக்கு கொடுத்த அறிவுரையின் அடிப்படையில் பேசாமல் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். என்ன நடந்திருந்தாலும் அவர் கரூருக்கு வந்திருக்க வேண்டும் மக்களை சந்தித்திருக்க வேண்டும் என மக்களில் ஒருவராக தானும் நினைப்பதாக கூறிய சனம் செட்டி, இருந்தாலும் நிச்சயம் விஜய் கரூருக்கு வந்து மக்களை சந்திப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக சதி வலை... அந்த ஒருத்தர தான் கை நீட்டுறாங்க! தவெக வழக்கறிஞர் அணி தாக்கு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share