ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க! வதந்திகள் குறித்து முதல்வர் வேதனை...!
கரூர் சம்பவம் குறித்து அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக அரசியலில் புதிய அலை என கூறப்படும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விஜய் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவரை காண்பதற்காக அவரது தொண்டர்கள் அலைகடலென குவிந்து உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதேபோல் தான் கரூர் மாவட்டத்திலும் நடந்தது. ஆனால் அந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இரண்டாவது நாளாக தனிநபர் ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக சதி வலை... அந்த ஒருத்தர தான் கை நீட்டுறாங்க! தவெக வழக்கறிஞர் அணி தாக்கு...!
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு வளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்றும் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். எந்த ஒரு கட்சித் தலைவரும் தனது தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தனிநபர் ஆணையம் உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் தற்குறி! கொலை குற்றவாளி...! விஜயை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… சர்ச்சை!