எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!
அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, கட்சியின் பனையூர் தலைமை அலுவலக வளாகம் புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெருங்கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், அலுவலகத்தின் முன் வளாகத்தில் ஏராளமானோர் நீண்ட நேரமாகக் காத்திருக்கும் காட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து த.வெ.க.வின் பனையூர் அலுவலகம் அரசியல் நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு நிர்வாகத்துக்கான தயாரிப்பு பணிகள், மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கொள்கை வகுப்பு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், பல்வேறு கட்சிகளிலிருந்து வரும் இணைப்புகள் அலுவலகத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளன.
இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி தொகுதியில் இருந்து அதிமுகவினர் பலர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் என கூறும் பிரமுகர்களும் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: CM விஜயை விமர்சித்த திமுக எம்எல்ஏ... கொளத்தூரை இழுத்து விட்ட சம்பவம்..! ஆஸ்டின் கேள்வி.. ஆதவ் பதிலடி..!
எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் மேனகா பாலகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும் என்றும் ஆதம் அர்ஜுனா உறுதியளித்தார். மேலும், நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தமிழக வெற்றி கழகத்தில் கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா இணைத்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த கட்சியை சேர்ந்த 3000 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!