×
 

புதிய நடுவர் மன்றம்..!! நம்பிக்கை இல்ல.. பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை..!

புதிய நடுவர் மன்றம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசினார்.

சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் அமர்வு என்று தொடங்கி நடைபெற்ற வருகிறது. மக்கள் பிரச்சனைகள் குறித்து காரசார வாதம் நடைபெற்றது. புதிய நடுவர் மன்றம் அமைப்பது கர்நாடகாவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது என்றும் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும்  

எனவும் பாமக எம்.எல்.ஏ செஞ்சி கணேஷ்குமார் கேள்வி எழுப்பினார். குடிநீருக்காக மேகதாது அணை தேவை என தனது வியூகத்தை மாற்றியுள்ளது கர்நாடகா என்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி தான் புதிய நடுவர் மன்றம் கேட்கிறோம் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

நீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் இருக்கிறது என்றும் அணை கட்டும் பணி என்பதால் புதிய ஆணையம் தேவை எனவும் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்தால் அது மேகதாது அணை கட்டுவதற்கு வழிவகுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறினர் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனக் கோருகிறோம் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

மேலும், மேகதாது விவகாரத்தில் புதிய நடுவா் மன்றம் எனக்குறிப்பிடாமல் ஆணையம் என தவறாக குறிப்பிட்டுவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, திட்ட அறிக்கை கொடுக்கச் சொல்லி கர்நாடகாவுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது என்றும் குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: CM விஜயை விமர்சித்த திமுக எம்எல்ஏ... கொளத்தூரை இழுத்து விட்ட சம்பவம்..! ஆஸ்டின் கேள்வி.. ஆதவ் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share