×
 

வாக்கு எண்ணிக்கை நெருங்கியாச்சு..! கூடுதல் பாதுகாப்பு கொடுங்க..! ஆதவ் வலியுறுத்தல்..!!

வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளரும் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களிலும், வாக்கு எண்ணும் அலுவலர்களைத் தவிர அரசியல் கட்சியினர் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று அவர் தெளிவாகக் கோரிக்கை வைத்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியை வாக்கு எண்ணும் மையமாகத் தேர்வு செய்துள்ள நிலையில், அங்கு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, வாக்கு எண்ணும் நாளன்று ஏற்படக்கூடிய சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே அரசியல் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர், இரண்டாயிரம் பேர் வரை கூடும் வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்தார்.

இத்தகைய கூட்டத்தைத் தடுக்கவும், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கவும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறைக்கு வலியுறுத்தினார். ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில், தவெக தலைவர் விஜய் அவர்கள் வேட்பாளர்களுக்கு வழங்கிய அறிவுரையைச் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: நாங்களே ரிசார்ட்ல இருந்துருக்கோம்..! பனையூர் உத்தரவுக்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன்..!!

தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்துக்கான முடிவை எடுத்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், சட்டம் ஒழுங்கை காக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே அரசியல் கட்சியினர் ஆயிரம், இரண்டாயிரம் பேர் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: தவெக தியாகத்தால் உருவான இயக்கம்..! மக்கள் தலைவர் விஜய்..! செங்கோட்டையன் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share