ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சமூக வலைதளத்தில் கருத்து சொன்னாலே கைது. இப்படி காவல்துறை ஆளும் வர்க்கத்தின் அடிவாருக்களாக மாறினால், இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி. கரூர் நெரிசல்ல நடந்தது 4 என்ன? தமிழகம் வந்தது பாஜ உண்மை கண்டறியும் குழு ஹேமாமாலினி விசிட் இலங்கை, நேபாளத்தில் ஜென்-Z தலைமுறை எழுச்சியைப் போல, தமிழகத்திலும் இளைஞர்கள் கூடி புரட்சி செய்ய வேண்டும். அது ஆட்சி மாற்றத்தின் அடித்தளமாகவும், அரசு பயங்கரவாதத்தின் முடிவாகவும் இருக்கும். பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தினும் சாஸ்திரங்கள் எனக் கூறியிருந்தார்.
நேபாளத்தில் சமீபத்தில் ஜென்-Z புரட்சியால் அரசு கவிழ்ந்ததை உதாரணமாகக் காட்டி, தமிழகத்தில் போன்ற எழுச்சி தேவை என வலியுறுத்தினார். இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டுவதாக விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், ஆதவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்த ஆதவ் அர்ஜூனா, அவசரமாக அந்தப் பதிவை நீக்கினார். இருப்பினும், ஸ்க்ரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விவாதத்தை தீவிரப்படுத்தின.
இதையும் படிங்க: விஜய் பிரச்சாரத்தில் புகுந்த ரவுடிகள்... சதிதான்...! நீதிமன்றத்தில் காரசார விவாதம்
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அரசியல் கட்சியினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கூடிய மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு காண்பிக்கப்பட்டது. பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் கவனித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுங்கள் என்றும் உத்தரவிட்டார். நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என்றும், இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றும் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார். புரட்சி ஏற்படுத்துவதுபோல பதிவிட்டுள்ளார் என்றும் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அத விடுங்க வேற கேளுங்க… பிரஸ்மீட்டில் சலித்துக் கொண்ட சீமான்…!