×
 

அத விடுங்க வேற கேளுங்க… பிரஸ்மீட்டில் சலித்துக் கொண்ட சீமான்…!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக யாரும் பேசவில்லை என்றும் அரசியலுக்காக பேசுவதாகவும் சீமான் தெரிவித்தார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்தினார். இந்த பிரச்சாரம் பெரும் துயரத்தில் முடிந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை ஏற்படாத பேரிழப்பு என்று கூறப்பட்டது. கரூர் சம்பவம் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சியினர் நிகழ்விடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் சம்பவத்தை எதிர்பாராத விபத்து என்று சீமான் கூறினார். நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது என்றும் யாரையும் குறை சொல்லி பயனில்லை எனவும் இது முற்றிலும் தவிர்க்க முடியாத விபத்து எனவும் தெரிவித்தார். புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நெரிசலை ஒப்பிட்டு, அது போலவே இது ஒரு தவறான தருணத்தில் நிகழ்ந்தது என்றும் பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லக்கூடாது., அது அனைவரின் பொறுப்பு என்று கூறியிருந்தார். 

இனி இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்க, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பேசுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம்... சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி... நீதிபதி சொன்ன காரணம்?

ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலையில் அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டிருப்பதாகவும், நெரிசலிசுக்கு உயிரிழந்தவர்களுக்காக யாரும் பேசுவதாக தெரியவில்லை என்றும் கூறினார். அதை விடுங்கள் வேறு ஏதாவது கேளுங்கள் என்று சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... தமிழக அரசு பதில் அளிக்க ஆணை... அதிரடி காட்டிய நீதிமன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share