இருமல் மருந்து விவகாரம்... திமுகவுக்கு இதுலயும் அரசியலா? பந்தாடிய அதிமுக
இருமல் மருந்து விவகாரம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடுத்த விளக்கத்தை அதிமுக விமர்சித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மருந்து ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்து மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை வழங்கி இருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத இரண்டு தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின் கோல்ட் ரிப் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார். மருந்து விவகாரம் தொடர்பாக அதிமுக சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உயிர்கள் போன பிறகு, மத்திய பிரதேச அரசு சொன்ன பிறகு, சோதனை மேற்கொண்டு நச்சுத்தன்மை இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக சுட்டிக்காட்டி உள்ளது. இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்க இந்த அரசுக்கு வெட்கமாக இல்லையா என்றும் மருந்து நிறுவனங்களை அரசு கண்காணிக்கும் லட்சணம் இது தானா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து.. ம.பியில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு..!!
தமிழ்நாடு முழுக்க செயல்படும் மருந்து நிறுவனங்களின் தரத்தை சோதனை செய்ய தரக் கட்டுப்பாட்டு குழு செயல்பாட்டில் உள்ளதா என்றும் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் மருந்துகள் தரமாக தான் உள்ளன என்பதை இந்த அரசால் வெள்ளை அறிக்கை வாயிலாக சொல்ல முடியுமா என்றும் நீதிமன்றம் கேட்கும் போது, தமிழக அரசால் மேற்கொள்ளப் படவேண்டிய Periodical தரப் பரிசோதனை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க திமுக அரசு தயாராக உள்ளதா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், 21 குழந்தைகள் உயிர்கள் போனதற்கு பொறுப்பேற்க முடியாமல், இதிலும் அரசியல் தான் செய்வீர்கள் என்றால், நீங்கள் மக்களை விட்டு, அவர்கள் உணர்வுகளை விட்டு, வெகு தூரம் சென்றுவிட்டீர்கள் என்பதையே காட்டுகிறது எனவும் சாடியது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??