“நீ நல்லா சாப்பிட்டிருக்க”... அமைச்சர் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..! வறுத்தெடுத்த அதிமுக..!!
போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து அவ்வப்போது பயணிகள் கூட்டம் அதிகமாகி, போதிய பேருந்துகள் இல்லாததால் பெரும் அவதி ஏற்படுவது தொடர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக தேர்தல் காலம் அல்லது பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்குச் செல்லும் போது இந்த நெருக்கடி தீவிரமடைகிறது. இந்தச் சூழலில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒரு இளைஞரின் கேள்விக்கு அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள், குறிப்பாக இளைஞர்கள் அமைச்சரிடம் நேரில் குற்றச்சாட்டு வைத்தனர். பொதுமக்களின் இத்தகைய புகார்களுக்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டியது அவரது அடிப்படைப் பொறுப்பு. ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அதிகாரத் திமிருடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பஸ் வராததால் கேள்வி கேட்ட இளைஞரை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவின.
குறிப்பாக, அமைச்சர் “நீ நல்லா சாப்பிட்டிருக்க” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..! அரசியலில் புதிய பரபரப்பு..!
ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார் என்றும் “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது? எனவும் கேட்டுள்ளது. GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல., மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள் என்றும் சாடியது.
இதையும் படிங்க: எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!