எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்து உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்தது. அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே., அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா? என்று சாடியது.
இதையும் படிங்க: நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!
இந்த நிலையில், 2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் Force ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா? என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. அவ்வளவு தில் இருந்தா, மெர்சல், மாஸ்டர் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே என்றும் கேட்டுள்ளது. இருக்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!