×
 

ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது இரு வெவ்வேறு சமூக-அரசியல் சூழல்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் பாலியல் குற்றங்கள், சாதிய வன்முறைகள், குறிப்பாக பட்டியல் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை உள்ளது. மறுபுறம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 26 வயது இளைஞர் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞர் காவல் துறை கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை முன்வைத்து அதிமுக கட்சி திமுக அரசுக்கு கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது. குறிப்பாக, "தொகுதி பங்கீடு தான் திமுகவுக்கு முக்கியமா?" என்ற கேள்வியை எழுப்பி, ஆளும் கட்சியின் முன்னுரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தூத்துக்குடியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாலை நேரத்தில் இயற்கை உபாதைக்காக சென்ற மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்சி வருகின்றனர். 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!

இந்த நிலையில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. ஒருபுறம் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை எதிர்த்து தமிழகமே போராடிக் கொண்டிருக்கிறது என்றும் மறுபுறம் ஆகாஷ் எனும் இளைஞர் காவல்நிலைய மரண சம்பவத்தை கண்டித்து அவரது குடும்பத்தார் 5ஆவது நாளாக தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை எல்லாம் கவனிக்க வேண்டிய பொம்மை முதல்வர் ஸ்டாலின் இதுபற்றிய எந்த கவலையும் இல்லாமல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளது 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share