ஒருவழியா முடிஞ்சுது..! தள்ளிப்போன பதவியேற்பு..! சான்றிதழ் கொண்டு வந்து பொறுப்பேற்ற அதிமுக எம்எல்ஏக்கள்..!
சான்றிதழ் இல்லாமல் பதவி ஏற்பு தள்ளிப்போன அதிமுக எம்எல்ஏக்கள் பிறகு சான்றிதழ்களை கொண்டு வந்து பதவி ஏற்று கொண்டனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்றே குறைவான இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட சில ஆதரவுடன் த.வெ.க அரசு அமைக்கப்பட்டு, விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்தப் புதிய அரசியல் யதார்த்தத்தில், எதிர்க்கட்சியாக மாறிய தி.மு.க மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்களின் பதவியேற்பு, 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக்கியது. தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த புதிய எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இந்த நிகழ்வு சில எதிர்பாராத தாமதங்கள் மற்றும் சிறு சிக்கல்களுடன் அமைந்தது. குறிப்பாக, அ.தி.மு.கவின் இரு முக்கிய உறுப்பினர்களான கே.சி.கருப்பணன் மற்றும் பி.உஷாராணி ஆகியோரின் விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: "அம்மா"..! ஜெயலலிதாவை நினைத்து உடைந்து அழுத பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ..! பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி..!
கே.சி.கருப்பணன் பவானி தொகுதியிலும், பி.உஷாராணி ஏற்காடு தொகுதியிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். காலை நடைபெற்ற பதவியேற்பு அமர்வின்போது, இவர்கள் இருவரும் தங்களது வெற்றிச் சான்றிதழை கொண்டு வராததால், சட்டப்பேரவை செயலக விதிமுறைகளின்படி பதவியேற்க முடியாமல் போனது. இதேபோல் அமைச்சர் கீர்த்தனாவும் தன்னுடைய வெற்றிச் சான்றிதழை கொண்டு வராததால் பதவி ஏற்க முடியாமல் போனது. அதன் பிறகு வெற்றிச் சான்றிதழ் கொண்டுவரப்பட்டு கீர்த்தனா, கே. சி. கருப்பணன், உஷாராணி ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!