"PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!
தமிழகத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக்கழக அரசை அதிமுக விமர்சித்து உள்ளது.
மதுராந்தகம் அருகே 75 வயது மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து தவெக நிர்வாகி கொலை செய்ததாக அதிமுக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவத்தையும் சுட்டி காட்டியுள்ளது. மேலும் நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பிய ஓடிய சம்பவத்தையும் கூறியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக அரசை பொய்க்கால் குதிரை அரசு என்று குறிப்பிட்டுள்ள அதிமுக, இதுக்குப் பெயர்தான் நீங்க சொன்ன மாற்றமா என்று கேள்வி எழுப்பி உள்ளது. மாற்றம்,புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா..? என கேட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!
குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம Silent mode-ல வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு என்றும் கூறியது. வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது என்றும் PR பில்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும், உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!