×
 

குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!

திமுக, தவெக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று, தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்தது. அங்கு பேசிய விஜய், தவெகவுக்கு வாக்களிக்குமாறு பெற்றோரை நிர்பந்திக்கும்படி குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சு உணர்வுப்பூர்வமாக குழந்தைகளை பயன்படுத்தி வாக்காளர்களை செல்வாக்கு செலுத்த முயன்றதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டன. 

இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி. அவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தவெக மட்டுமின்றி திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாகவும், குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். குறிப்பாக விஜயின் பேச்சு குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக தூண்டி, அவர்களது பெற்றோரை வாக்குப் போட வற்புறுத்தச் செய்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக விசாரணை நடத்த கூறிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பண பட்டுவாடா செய்ததாக திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராகவும் வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!

செய்தி அடிப்படையில் வழக்கு தாக்கல் நடந்திருப்பதாகவும் தேர்தல் நடத்தை விரிவுரல் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக தங்களுக்கு எதிராக எந்த வழக்கமும் இல்லை என திமுக அப்போது பதிலளித்தது. ஊழல் நடவடிக்கையை பொறுத்தவரை வெற்றி பெற்ற வேட்பாளரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் திமுக கேட்டுக் கொண்டுள்ளது. 

 

இதையும் படிங்க: நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share