BRAIN இருக்கா..? மண்குதிரை ஸ்டாலின்..! போட்டு உடைத்த ஆ.ராசா…! பூந்து விளாசிய அதிமுக..!!
ஆ. ராசா பேசிய ஆடியோக்களை சுட்டிக்காட்டி அதிமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ. ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதோடு பெரும் விவாதத்திற்கு ஆளாக்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து வாய் திறப்பாரா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆடியோக்களை சுட்டிக்காட்டி அதிமுக கடும் விமர்சனங்களை முன் வைத்து உள்ளது. ஸ்டாலின் எப்படிபட்ட தலைவர் என்பதை ஆ. ராசாவே போட்டு உடைந்துவிட்டார் என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. போலி விளம்பரங்களை விலக்கி பார்த்தால் ஸ்டாலின் வெறும் மண்குதிரை தான் என்று நாங்கள் சொன்ன கூற்றை இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளரே வழிமொழிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஜி கருணாநிதியிடம் இருந்து என்ன பணம் சென்றது? அழகிரி சிறைக்கு வந்து, ஸ்டாலின் பெயரைக் கூறி அப்ரூவர் ஆகச் சொன்னார் என்றால், 1,76,000 கோடி ரூபாய் ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பெருஞ்சோகம்...!! - எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி...!
தாங்கள் ஏற்கனவே சந்தேகித்தது போல், இந்த சிதம்பர ரகசியங்களை கூறி தான் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதா?... ஆ. ராசாவின் பேச்சு பற்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா என பல்வேறு கேள்விகளை அதிமுக முன்வைத்துள்ளது. தாங்களாவது முதல்வர் ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று தான் கூறுகிறோம் என்றும் ஆனால் உங்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் பிரைன் இருக்கா என்று கேட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளது. தமிழ்நாடு வாழ வேண்டுமென்றால் திமுக வீழ வேண்டும் எனவும் அதிமுக குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: பழைய துரோகங்களை மறைக்க திமுகவின் புது மாய வலை..! அதிமுக வளர்மதி விமர்சனம்..!!