×
 

விறுவிறு அரசியல் களம்... நீடிக்கும் இழுபறி..! மார்ச் 16ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை...!!

மார்ச் 16ஆம் தேதி அதிமுக கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் குறித்து தற்போது பரவலான பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மார்ச் 16ஆம் தேதி முதல் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதாகவும், அதில் சில இழுபறிகள் நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவும் பாஜகவும் கடந்த ஆண்டே கூட்டணி அறிவித்து விட்டாலும், தொகுதி பங்கீடு விவகாரத்தில் இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு சுமார் 25 முதல் 29 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பாஜக தரப்பில் ஆரம்பத்தில் 35 முதல் 60 தொகுதிகள் வரை கோரிய நிலையில், பின்னர் இறங்கி வந்து 29 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இதனால், இரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நீண்டு வருகின்றன. மதுரை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்ட சந்திப்புகள் நடைபெற்றாலும், முழுமையான ஒப்பந்தம் இன்னும் உறுதியாகவில்லை.மேலும், அதிமுக கூட்டணியில் அமமுக, பாமக போன்ற கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.

இதற்காக மார்ச் 16ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டுள்ள அதே சமயத்தில் அதிமுகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பாஜக கேட்பதால் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கும் சூழ்நிலையில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மிக தீவிரமாக நடத்தி வருகிறது. அதிமுகவில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்து வருவது கூட்டணிக்குள் சர்ச்சை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக கூறுகின்றனர். 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share