ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!
திமுக வேட்பாளரின் காலில் விழுந்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளரால் வேட்புனு செலுத்துமிடத்தில் பரபரப்பு
கும்மிடிப்பூண்டியில் வேட்புமனு தாக்கலின் போது திமுக வேட்பாளரின் காலில் விழுந்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர். எதிர் எதிர் துருவங்களாக இருந்த போதிலும் நேருக்கு நேர் சந்தித்தபோது பரஸ்பரம் நட்பு பாராட்டல்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் டி.ஜே.கோவிந்தராஜன் திமுக சார்பில் மீண்டும் 2வது முறையாக வேட்பாளராக களம் காண்கிறார். இதே போல அதிமுகவில் சுதாகர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் முன்பாக அடுத்தடுத்து திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திமுக வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது வேட்பு மனுவை தாக்கல் செய்ய அலுவலகத்திற்குள் சென்ற அதிமுக வேட்பாளர் சுதாகர் எதிரே வந்த திமுக வேட்பாளரை பார்த்து வணக்கம் வைத்தார். பதிலுக்கு திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் வணக்கம் வைத்த போது, திடீரென திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் சுதாகர் ஆசி பெற்றார்.
இதையும் படிங்க: BRAIN இருக்கா..? மண்குதிரை ஸ்டாலின்..! போட்டு உடைத்த ஆ.ராசா…! பூந்து விளாசிய அதிமுக..!!
அப்போது பதறிய திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளர் தோளை பிடித்து தூக்கி எழுப்பினார். எதிரெதிர் துருவங்களாக தேர்தலில் களம் காணும் போதிலும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வணக்கம் வைத்து அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெருஞ்சோகம்...!! - எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி...!