×
 

முந்திரி கொட்டைதனமா கேஸ் போட்டா இப்படிதான்! அடிமைகளின் குறுக்கு புத்திக்கு குட்டு.. விளாசிய திமுக..!

அவசரகதியில் தொடர்ந்த வழக்கில் அடிமைகளின் குறுக்கு புத்திக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக திமுக விமர்சித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயர் மற்றும் விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், அரசு திட்டங்களில் ஆளுங்கட்சியின் தலைவர்களின் பெயர்களையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களையோ, கட்சி சின்னங்களையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. 

தமிழக அரசு தொடங்கும் புதிய திட்டங்கள் மற்றும் விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு இடைக்கால தடைக்காக அமைந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகுது! திமுகவில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!

இந்த வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டது. தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் அரசியல் சண்டைகள் தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனுவை போட்டதை தாங்கள் ஏற்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மேலும் வழக்கை தாக்கல் செய்த சிவி சண்முகத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டிய திமுக, கடுமையாக விமர்சித்தது அடிமைகளின் குறுக்கு புத்திக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்ததாக கூறியது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு மக்களின் வரவேற்பைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலும் குறுக்கு புத்தியும் கொண்ட அடிமைச்சாமியை குஷிப்படுத்த அத்திட்டத்தை எதிர்த்து எப்போதும் முந்திரிக் கொட்டை தனமாக செயல்படும் துன்பதுரைகளின் பேச்சைக் கேட்டு நிதானம் என்றால் என்னவென்று கூட தெரியாத அடிமைகள் அவசரகதியில் தொடர்ந்த வழக்கு என கூறியுள்ளது.

அனைவரின் தலையிலும் உங்கள் அரசியல் வன்மத்தை காட்ட நீதிமன்றத்தை பயன்படுத்துவதா என ஓங்கி குட்டு வைத்தது மட்டுமல்லாமல் ரூ.10 லட்சம் அபராதமும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. திரும்பும் இடத்தில் எல்லாம் அடிமைகள் அடி வாங்குவதைப் பார்க்க பாவமாக உள்ளது என்றும் கிண்டலடித்து உள்ளது. 

இதையும் படிங்க: முதல்வருடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share