×
 

நடுரோட்டில் உடைந்த அதிமுக... கட்சி அலுவலகம் சுற்றிவளைப்பு... பசுபதி Vs சி.வி.சண்முகம் டீம் இடையே மோதல்..!

இன்று காலை விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புதியதாக மாவட்ட செயலாளராக அறிவித்துள்ள பசுபதியும், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தரப்பும் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

தமிழகத்தில் அதிமுகவினர் சி.வி.சண்முகம் , எஸ் பி.வேலுமணி தலைமையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்த நிலையில் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சி.வி.சண்முகம் ,எஸ்பி வேலுமணி உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கினார். அதிமுகவில் இரண்டு அணியாக செயல்படுகிறது. 

இந்த மோதல் போக்கு தலைமை அளவில் மட்டுமல்ல, மாவட்டந்தோறும் அடிமட்ட தொண்டர்கள் வரை வெடித்துள்ளது. குறிப்பாக சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. கட்சிக்கு எதிராக சி.வி.சண்முகம் செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட  செயலாளராக இருந்த சிவி.சண்முகத்தை நீக்கி விழுப்புரம் மாவட்டத்திற்கு அதிமுக முன்னாள் நகர செயலாளர் பசுபதியை புதிய மாவட்ட செயலாளராக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

இந்நிலையில் விழுப்புரத்தில் சிவி.சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் என இரு அணிகளாக செயல்பட்டு வரக்கூடிய நிலையில் விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினர் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளராக அறிவித்துள்ள பசுபதி கட்சியின் விதிமுறைப்படி எனக்கு கட்சி அலுவலகத்தின் சாவியை சிவி.சண்முகம் ஆதரவாளர்களிடம் இருந்து பெற்று தர வேண்டும். நாளை நல்ல நாள் என்பதால் கட்சி அலுவலகம் செல்ல உள்ளதால் இருதரப்பினரிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனுக்களை அளித்தார்.

இதையும் படிங்க: தொடர்ந்து ஒதுக்கப்படும் EPS..! நமது அம்மா நாளிதழிலிருந்து எடப்பாடியின் பெயர் நீக்கம்..! தொண்டர்கள் அதிர்ச்சி..!!

மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார். கட்சி விதிகளின்படி, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் அலுவலக சாவியை புதிய பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், சி.வி.சண்முகம் பதவி நீக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலேயே மாவட்டக் கழக அலுவலகத்தை திறந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலி, ஏசி, சோபா, கணினி, ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்.

மேலும் தனது வருகையின்போது ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் வருவதை அறிந்த சி.வி. சண்முகம், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில் சிலரை அலுவலகத்திற்குள் வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்து, அலுவலகத்திற்குச் செல்ல பாதுகாப்பு அளிக்க வேண்டும். கட்சிக் அலுவலகம் தனியார் சொத்து அல்ல. அது அதிமுக டிரஸ்டின் கீழ் உள்ள சொத்து. மறைந்த முன்னாள் ஜெயலலிதா ஏற்படுத்திய டிரஸ்டின் பெயரில் இருப்பதாகவும் விளக்கமளித்தார். அலுவலக சாவி தற்போது மற்றொரு நபரிடம் இருப்பதாக கூறி, அதை பெற்றுத்தர காவல்துறையிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி மற்றும் சட்ட ரீதியாக முடிவு எடுக்கப்படும் என வலியுறுத்தியிருந்தார். 

இதனிடையே, இன்று காலை விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புதியதாக மாவட்ட செயலாளராக அறிவித்துள்ள பசுபதியும், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தரப்பும் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இருதரப்பினரும் அலுவலகத்திற்கு செல்வதற்காக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அதிமுக கட்சி அலுவலகத்தை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வருகின்றனர். அப்போது காரில் வந்த சி.வி சண்முகம் தரப்பைச் சார்ந்தவர்கள் உள்ளே செல்ல முடிந்ததால் போலீசாருக்கும் சண்முகம் தரப்புக்கு  இடையே தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த இடி... பறிபோகும் எம்எல்ஏ பதவி? - வெளியானது ஷாக்கிங் தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share