×
 

எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த இடி... பறிபோகும் எம்எல்ஏ பதவி? - வெளியானது ஷாக்கிங் தகவல்...!

சென்னை வந்துள்ள ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கட்டுப்பாட்டை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரது தலைமையில் 47 எம்எல்ஏக்கள் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் 47 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு தன்னை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால் அது போலி கடிதம் என வாதிடும் சி.வி. சண்முகம் அணி அதிக எம்எல்ஏக்களை கொண்ட தங்கள் தரப்பில் இருந்தே கொறடாவை தேர்வு செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது.

 மூன்றாவது முறையாக சபாநாயகரை சந்தித்த அந்த அணியினர் கொறடா விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரு அணிகளின் மனுக்களும் ஆய்வில் உள்ளதாகவும் சட்டப்படி முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்துள்ள ஆளுநர் அர்லேகரை எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கட்சி கட்டுப்பாட்டை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர் என்றும், கொறடா உத்தரவை மீறி செயல்படும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த உள்ளார். 

இதனிடையே கடலூரில் பாதிரி குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சி. சண்முகம் ஆதரவாளர்கள் போட்ட பூட்டை எடப்பாடி ஆதரவாளர்கள் உடைத்து புதிய பூட்டு போட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அலுவலகம் செல்ல பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட செயலாளர் பசுபதி: அந்த அலுவலகம் தனி நபர் பெயரில் கிடையாது, அதிமுகவுடைய டிரஸ்டில் உள்ளது. எங்களுடைய கட்சியினுடைய டிரஸ்ட் மூலமாக ஜெயலலிதாவால் வாங்கப்பட்டது.  இதுதொடர்பாக போலீசில் மனு கொடுத்திருக்கறோம். நாளைக்கு அமாவாசை நாங்க  ஆபீஸ்க்கு போவோம். எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க அப்படின்னு சொல்லிக்கறேன். ஏன்னா அவங்க சமூக விரோதிகளை வைத்து தேவையில்லாத பிரச்சனை பண்ண போறாங்க. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க. இங்க குணா என்ற ஒரு நபரிடம் வந்து அந்த கட்சி அலுவத்தினுடைய சாவி இருக்குது. அதை எங்களுக்கு பெற்று கொடுங்கன்னு சொல்லி நாங்க மனு கொடுத்திருக்கிறோம்.  தங்களை அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி மற்றும் சட்டரீதியாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

சட்டமன்ற குழு தலைவர் என்பது, சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் அனைத்து எம்.எல்.க்கள் கூடி ஜனநாயக முறையில் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கும் தலைவராவார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றக் குழுத் தலைவர், கட்சியின் கொள்கைகளை சட்டமன்றத்தில் முன்னெடுத்துச் செல்வதிலும், கூட்டத்தொடரில் கட்சியின் நிலைப்பாட்டை மிக முக்கியமானதாக முன்வைப்பதிலும் முதன்மையானவராக இருப்பார். அப்படி பார்த்தால் சி.வி.சண்முகம் அணியில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: தமிழக அரசியலில் மெகா திருப்பம்.. இபிஎஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி... பதவி பறிபோன மறுநாளே திடீர் மாற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share