தட்றோம்... தூக்குறோம்... இந்த முறை மயிலம் தொகுதி தான்... சி.வி. சண்முகம் முடிவு...!
வரும் சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி. சண்முகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சி.வி. சண்முகம் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவராகவும், விழுப்புரம் மாவட்டத்தின் அரசியல் அஸ்திவாரங்களில் ஒருவராகவும் விளங்குபவர். சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், அதிமுகவில் தீவிர உறுப்பினராக இணைந்து, கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்து, விழுப்புரம் பகுதியை கட்சிக்கு வலுவான கோட்டையாக மாற்றினார்.
அவரது அரசியல் பயணம் 2001ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2006இல் மீண்டும் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்று, சட்டம் மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011இல் விழுப்புரம் தொகுதிக்கு மாறி வெற்றி பெற்று, சட்டம், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
2016இல் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சராக நியமனம் பெற்றார். இந்தக் காலகட்டங்களில் அவர் சட்டம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்களில் முக்கியப் பங்காற்றினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோல்வியடைந்த போதிலும், கட்சியில் அவரது செல்வாக்கு குறையவில்லை. 2022இல் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகப் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: இறந்தவர்கள் பெயர் நீக்க திமுகவுக்கு என்ன பயம்? CV சண்முகம் சரமாரி கேள்வி..!
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இந்த முறை மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சி.வி சண்முகம் முடிவு செய்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் சி.வி. சண்முகம் தோல்வி அடைந்த நிலையில் இந்த முறையும் வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் என்பதால் மயிலம் தொகுதியை அவர் தேர்ந்தெடுத்து போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: NDA-க்குள் மீண்டும் ஓபிஎஸ்... பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுகவினர்...கூட்டணிக்குள் கொளுத்திப் போட்ட ராம சீனிவாசன்...!