அமைச்சர்கள் UNFIT... ஆட்சிக்கு ZERO MARK..! விளாசிய அதிமுக Ex. அமைச்சர்..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, உங்க இனம் இருக்கும் இடத்தில் என்னை தேர்தல் பொறுப்பாளராக போட்டிருக்கீங்களே என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன். எனது சார்பில் சீனியர் நீங்க செல்லுங்கள் என கூறி அனுப்பி உள்ளார். அவரை ஏற்றுக்கொண்டதை போல் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். பல சோதனைகளை கடந்து வந்துள்ளோம். அதிமுக.வில் வெற்றி பெற்றவர் ஒரு நன்றி சொல்லிவிட்டாவது போய் இருக்கலாம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்றத்தில் சபாநாயகர் அமைச்சர்கள் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார். அப்படி எனில், அமைச்சர்கள் unfit, ஆக உள்ளனர். இந்த ஆட்சிக்கு 0 மார்க் தர முடியும் என்று கூறினார்.
இன்னும் 10 எம்எல்ஏ கள் தவெக.விற்கு வருவார்கள் என கே.ஏ.செங்கோட்டையன் கூறுகிறார், அவர் எந்த ஜோசியரிடம் கேட்டு வந்தார் என்று கேட்டுள்ளார். ஏற்கனவே சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவிற்கு வருகின்றனர் என்றும் குதிரை பேரம் பேசியவர்களும் குதிரை பேரத்தில் சென்றவர்களும் வெட்கப்பட வேண்டும். விஜய் அலை என்பது இல்லை. 110 நாட்களில் உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!
விஜய் லண்டன் பயணக் காட்சிகள் டூப் கார் ரேஸ் பார்க்க மக்கள் வரி பணத்தில் சென்றுள்ளனர். அந்த நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. இங்கேயே ஒப்பந்தம் போட்டிருக்கலாம் அவர் எம்ஜிஆரோ என்டிஆரோ கிடையாது. விஜயின் மாய பிம்பத்தின் முகமூடி கழன்று விட்டது. அதிமுக- வினர் ரத்தம் சிந்தி எம்எல்ஏ ஆக்கினோம். குதிரை பேரம் நடத்தி மாற்று கட்சிக்கு சென்றுள்ளார். கட்சியினர் அவரை தோற்கடிப்பார்கள். 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!