"இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தவெகவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது என சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது என்றும் இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது எனவும் தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது., நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது என்றும் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும்,
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்., எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் என்றார். தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் என்றும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை., ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார். முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்றும் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது என்றும் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!