×
 

" தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய போது தாராபுரம் அதிமுக கோட்டை என்று தெரிவித்தார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, உங்க இனம் இருக்கும் இடத்தில் என்னை தேர்தல் பொறுப்பாளராக போட்டிருக்கீங்களே என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன். எனது சார்பில் சீனியர் நீங்க செல்லுங்கள் என கூறி அனுப்பி உள்ளார்.  அவரை ஏற்றுக்கொண்டதை போல் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். பல சோதனைகளை கடந்து வந்துள்ளோம்.  அதிமுக.வில் வெற்றி பெற்றவர் ஒரு நன்றி சொல்லிவிட்டாவது போய் இருக்கலாம் என்றார்.

துரோகம் செய்து விட்டு மாற்று கட்சிக்கு சென்றவர் மீண்டும் அந்த கட்சியில் போட்டியிடுகிறார் என்றும் துரோகத்திற்கு பரிசு இந்த தேர்தலில் அவருக்கு வழங்கப்படும். இது நமக்கு மான பிரச்சனை எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் அளித்த 318 தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. 6 சிலிண்டர் தருவதாக கூறி விட்டு 3 சிலிண்டர் அறிவித்தார். பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யவில்லை.  விஜய் சட்டமன்றத்தில் இதற்கு முன் இருந்த முதலமைச்சர்கள் எப்படி நடந்து கொண்டனர். எப்படி பேச வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவருக்கு அனுபவம் போதவில்லை. மானிய கோரிக்கையில் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், 1972.ல் நடந்த சம்பவங்களை பேசுகிறார் என்றார்.

டாஸ்மாக் பாட்டிலுக்கு இன்று 30 ரூபாய் அளவிற்கு லஞ்சம் அதிகரித்துள்ளது் அந்த பணம் எங்கே செல்கிறது. தவெக வினரிடம் இந்த கேள்வியை எழுப்புங்கள். 100 நாட்களில் அவர்களின் உண்மை முகம் வெளியே தெரிந்து விட்டது.  வெளிநாடு முதலமைச்சர் சென்றுள்ளார். அந்த நிறுவனம் சென்னையிலேயே உள்ளது. இங்கேயே ஒப்பந்தம் போட்டிருக்கலாம். அவர் யார் யாருடன் வெளிநாடு சென்றுள்ளார் என்பதை பார்க்க வேண்டும். தவெக 100 நாள் ஆட்சியில்,ஊழல் லஞ்சம் பெருகி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. இந்த ஆட்சி தேவையா என்று கேட்ட அவர், தாராபுரம் தொகுதி அதிமுக கோட்டை என்றும் சூழ்நிலையால் பல விசயங்களை வெளியே சொல்ல முடியாது. விரைவில் எடப்பாடியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார். ஒரு வருடத்திற்குள் எடப்பாடி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த விஜய் மற்றும் தவெக.வின் முகத்திரை தாராபுரம் இடைதேர்தலில் கிழிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share