×
 

இன்னும் 4 மாசம் குடுப்பீங்க... உங்க நாடகம் எல்லாருக்கும் தெரியும்..! விளாசிய அதிமுக..!

இன்னும் நான்கு மாதங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்படும் என்றால் மீதம் 56 மாதங்களுக்கான பணம் என்னவானது என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது..

தமிழ்நாட்டின் சமூக நலத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல் நிகழும் நிகழ்வாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' விழா, இன்று சென்னையின் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழா, தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் வெற்றிகளை கொண்டாடும் ஒரு பிரமாண்டமான சிறப்பு நிகழ்ச்சியாக அமையும். இது வெறும் தொடக்க விழா மட்டுமல்ல. பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றங்களை, அவர்களின் சொந்த வார்த்தைகளில் உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தளமாகவும் உருவெடுக்கிறது.

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி முழங்குவதாகவும் அதை எப்போது கொடுத்தீர்கள் என்றும் அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்து விட்டு, அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்து விட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்களா? திமுக அரசுக்கு கூச்சமே இல்லையா... அதிமுக விமர்சனம்..!

இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும் என்றும் வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை., அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றும் அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான்,மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல என்றும் உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை எனவும் கூறியுள்ளது. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விறுவிறு SIR பணிகள்... மேலும் அவகாசம் நீட்டிப்பு...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share