தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி... உறுத்தலையா முதல்வரே..! அதிமுக அதிருப்தி..!
தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவத்தை அதிமுக கண்டித்துள்ளது.
தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டத்தில் சமீபத்தில் எழுந்த ஒரு சர்ச்சை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவாக வழங்கப்பட்ட வெண்பொங்கலில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியகுளம் நகராட்சியில் சுமார் 179 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், உணவு போடி பகுதியில் தயாரிக்கப்பட்டு ஹாட் பாக்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டு, வடகரை பஸ் ஸ்டாண்ட், நகராட்சி பள்ளி, அலுவலக வளாகம், மகாத்மா காந்தி பூங்கா அருகே போன்ற பல இடங்களில் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடகரை 5-ஆம் வார்டைச் சேர்ந்த 56 வயது பெண் தூய்மைப் பணியாளர் குணம் என்பவர் உணவைப் பெற்றபோது, வெண்பொங்கலில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தார்.
இது உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கடினமான பணிக்கு ஊதியத்துடன் உணவும் வழங்கப்படுவதாக இருந்தாலும், இத்தகைய தரமற்ற நிலை அவர்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நகராட்சி தலைவர் சுமிதா உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இது திமுக ஆளும் அரசின் கீழ் நடைபெறும் உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குறைபாடு என்பதால், எதிர்க்கட்சியான அதிமுக உடனடியாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: பெரும் மோதல் ஏற்பட வாய்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பதற்றம்... குவிந்த போலீஸ்....!
தூய்மை பணியாளர்கள் வலியோடு சொல்லும் வார்த்தைகள் உறுதவில்லையா என்றும் ஒரு அடிப்படை விஷயமான உணவை கூட முறையாக, அவமதிக்காமல் வழங்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. மேட்டிமை புத்தியோடு தொடர்ந்து எளிய மக்களை எள்ளி ஆளும் விடியா திமுக அரசை, அதே எளிய மக்களின் சக்தி வீழ்த்த தான் போகிறது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “இபிஎஸ் தான் முதல்வர் ஆனா...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த நயினார்... அமைச்சரவைக்கு காத்திருக்கும் ஆப்பு...!