×
 

விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

திமுக ஆட்சியில் வீட்டு பில் வழங்கி உண்மை நிலையை உணர்த்தி வருவதாக அதிமுக தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியால் மக்கள் படும் இன்னல்களை இல்லந்தோறும் கொண்டுசேர்க்கும் விதமாக, விடியா ஆட்சி வீட்டு Billலே சாட்சி என்ற பெயரில் Punishment Bill வழங்கி மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தும் பிரச்சாரம் கடந்த 28.01.2026 முதல் நடைபெற்று வருவதாக அதிமுக தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் துயரங்களையும் பகிர்வது, இனியும் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்றும் கூறியது. இதுவரை 1.04 கோடி குடும்பங்களை நாம் சென்று சேர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளது.  மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பூத்களிலும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏதுவாக, Printer-கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5,30,000 இந்த விடியா திமுக ஆட்சியால் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.20 கோடி குடும்பங்களுக்கு கணக்கிட்டால், ஒட்டுமொத்தமாக ரூ. 11,66,000,00,00,000 இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: திமுக = டோட்டல் ஃபெயிலியர்..! கிளியை வளர்த்து அராத்து குரங்கு கிட்ட கொடுத்துட்டோம்.. பாஜக விமர்சனம்..!!

முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரும் முன்னெடுத்துச் செல்லும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு குடும்பத்தினரும் திமுக ஆட்சியால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் துயரங்களையும் பகிர்வது, இனியும் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்ற சூளுரையின் முன்னோட்டம் என்றும் தெரிவித்து உள்ளது. 

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share