"ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!
திமுக பிரதிநிதிகள் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா. அவர், தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார். “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
கரூர் துயரச் சம்பவத்தில் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து திமுகவினர் புகார் மனு கொடுத்து உள்ளனர். சட்டம் ஒழுங்கு விவகாரம், பாலியல் வன்கொடுமைகள், அரசு வழக்கறிஞர் நியமனம், ஆய்வு என்ற பெயரில் அராஜகம் நடப்பதாக திமுக சுட்டிக்காட்டி உள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையின் மூலம் மிரட்டியது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!
கரூர் துயரச் சம்பவத்தில் காவல்துறையே கொலை செய்தது என வரம்பு மீறி அமைச்சர்கள் பேசுவதாகவும் திமுக புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றிக்கழக அரசு மீது பாஜக நிர்வாகிகள் புகார் மனு கொடுத்த நிலையில் திமுக பிரதிநிதிகள் சந்தித்து உள்ளனர். திமுக, பாஜகவை அதிமுக பிரதிநிதிகளும் ஆளுநரை சந்தித்து உள்ளனர். தமிழக வெற்றிக்கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆளுநரை சந்தித்து முறையிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!