“கோபாலபுரத்து அழகேசா... நீ ஆண்டது போதும்... வீட்டுக்குப் போ” - முதல்வர் மு.க.ஸ்டாலினை பாட்டு பாடி பங்கமாய் கலாய்த்த ஜெயக்குமார்...!
கோபாலபுரத்து அழகேசா ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் நீ வீட்டுக்கு போ” என்கின்ற குரல் தற்போது தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அவைத்தலைவர் தமிழ் உசேசன் உடல்நலக்குறைவு காரணமாக அப்செண்ட் ஆனதால், தற்காலிக அவைத்தலைவராக கே.பி முனுசாமி செயல்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர்கள் என 4500 முதல் 5000 பேர் வருகை தந்துள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் உரையாற்றினர். அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றுகையில்,
வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு பொதுக்குழு இந்த கூட்டத்திற்கு சிறப்பான ஒரு உரையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக உரையாற்றவுள்ளதால், இரண்டே கருத்துக்களை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். இன்னும் 100 நாட்களில் இந்த கொடுங்கோன்மையான அட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் காத்திருக்கிறார்கள். “கோபாலபுரத்து அழகேசா ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் நீ வீட்டுக்கு போ” என்கின்ற குரல் தற்போது தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தி, வெறும் ஒரு போட்டோஷூட் மட்டும் நடத்தி மக்களை ஏமாற்ற நினைத்தால் புரட்சித் தலைவர் பாடியது போல், “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கின்றான். சமயம் பார்த்து பல வகைகளும் கொள்ளை அடிக்கிறான்” என்கின்ற வகையில் இன்றைக்கு கோபாலபுரத்து அழகேசன் குடும்பம், ஸ்டாலின் குடும்பம் தமிழ்நாட்டை சூறையாடி வருகிறது.
இதையும் படிங்க: வெறிநாய்க்கடி மையமாக மாறிய மதுரை... இது தான் அறிவாலய அரசியல்..! நயினார் விமர்சனம்..!
புரட்சி தலைவர் சொன்னது போல அந்த தீய சக்தியை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும். வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் நம்மை விட ஒரு மிகப்பெரிய சக்தி உலகத்திலே இருக்க முடியாது. அந்த ஒரே சக்தி அது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரே எதிரி என்று சொன்னால் அது திமுக தான். மற்றதெல்லாம் உதிரிகள் மற்றதெல்லாம் உதிரி அந்த உதிரிகளை பற்றி கவலைப்படாமல் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு மீண்டும் அதிமுக அரசை தமிழகத்தில் அமைப்போம் என சூளுரைப்போம் என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசை குறைச்சொல்லும் ஊழல் பெருச்சாளிகள்... திமுகவை விளாசிய நயினார்..!