×
 

நடிக்குறாங்க... DMK ஆல்ஃபா கொரோனா... TVK பீட்டா கொரோனா..! இன்பதுரை விளாசல்..!!

மேகதாது விவகாரத்தை சுட்டிக்காட்டி திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தை அதிமுக எம்பி இன்ப துரை விமர்சித்தார்.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை விவகாரம் நீண்டகாலமாக அரசியல், சட்டப்பூர்வ மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாக இருந்து வருகிறது. 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும், 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் தெளிவான நீர் பங்கீட்டை வரையறுத்துள்ள நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், முதலமைச்சர் விஜயின் கர்நாடக பேச்சுவார்த்தை முயற்சியும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் பின்னணியில் அதிமுக எம்.பி. இன்பதுரையின் “திமுக ஆல்பா கொரோனா, தவெக பீட்டா கொரோனா” என்ற கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில், மேகதாது பிரச்னையை தனி நடுவர் மன்றம் மூலம் தீர்க்க வேண்டும் என்ற இடைச்செருகல் சேர்க்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே மார்ச் 2026-ல் மத்திய அரசுக்கு இதற்கான கோரிக்கை விடுத்திருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்ற உத்தரவும் தற்போதைய நீர் பங்கீட்டை மட்டுமே உறுதி செய்கின்றன. புதிய அணை கட்டுவது உபரி நீர், புதிய திட்டம் சார்ந்த விவாதத்தை உருவாக்குகிறது. எனவே, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் பிரிவு 4-ன் கீழ் தனி நடுவர் மன்றம் அமைப்பது சரியான நடவடிக்கை. இது 2018 தீர்ப்பை பாதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் விளக்கினர். பெண்ணையாறு விவகாரத்தில் இதே மாதிரி நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதையும் படிங்க: "மிசா, எமர்ஜென்சியை பார்த்த கட்சி தி.மு.க"..! தவெக சரிவை சந்திப்பது உறுதி..! உதயநிதி திட்டவட்டம்..!

காவிரி இறுதித் தீர்ப்பு தெளிவாக இருக்கும்போது, உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளை தவெக ஏற்று புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டி சட்டமன்றத்தில் இடைச்செருகல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய காரணம் என்ன என்று அதிமுக எம்பி இன்ப துரை கேள்வி எழுப்பினார். தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு அமலில் இருக்கும்போது, காவிரி நீரைப் பெற கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டுள்ளார். மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக ஆல்பா கொரோனா வைரஸ் என்றால், தவெக பீட்டா கொரோனா என்று அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பட்ஜெட்..! எதிர்க்கட்சி வியூகம்... உதயநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share