×
 

ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஆர்சிகேட் முன்பு ராட்சத பேனர்கள் வைத்துள்ளனர்  உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அதிமுக கட்சி நிர்வாகிகள்

தமிழகத்தில், நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளை அப்பாவி பொதுமக்களை தவிர, அரசியல் கட்சியினரோ, வியாபாரிகளோ கொஞ்சமும் மதிப்பதும் இல்லை; அவற்றை பொருட்படுத்துவதும் இல்லை என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் உணர முடியும். 

அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ் பேனர்கள், வாகன ஓட்டிகள் மீது சரிந்து விழுந்து, உயிரிழப்பு நேரிடும்போது, பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அதை, எந்த அரசியல் கட்சியும் மதிப்பது இல்லை; 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்ற அகம்பாவத்தில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சாலைகளில் கூட பேனர்கள் வைக்கின்றனர்.

அரசியல் கட்சியினர் மட்டுமல்ல; விளம்பர நிறுவனங்களும் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை. வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில், விளம்பர பலகை வைக்கக் கூடாது என்று, நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், விளம்பர பேனர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, குறையவில்லை. 

இதையும் படிங்க: மீண்டும் அத்துமீறல்...பழனி கோவில் காவலாளி அவசர கதியில் கைது! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக

தற்போது நெய்வேலியில் மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி அதிமுக கட்சி நிர்வாகிகள் பண்ருட்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஆர்சிகேட் முன்பு ராட்சத பேனர்கள் வைத்துள்ளனர் . உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அதிமுக கட்சி நிர்வாகிகளின் செயல் அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் அவர் இன்று இரவு நெய்வேலி ஆர்சிகேட் முன்பு பேச உள்ள நிலையில் அவர் வருகைக்காக சென்னை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே ராட்சத பேனர்கள் வைத்துள்ளனர்.

சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலையின் நடுவே பேனர்கள் வைத்துள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தோடு சாலையை கடந்து செல்கின்றனர் ஏற்கனவே சென்னையில் சாலையில் சென்ற பெண் மீது பேனர் விழுந்து இறந்த சம்பவம் நடந்தும் மீண்டும் மீண்டும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து சாலையில் பேனர்களை வைத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை உடனடியாக அகற்றப்படுமா என பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share