“உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...!
விஜய் தனது உயரம், மக்களிடம் உள்ள செல்வாக்கு பற்றி எல்லாம் தெரியாமல் தற்பெருமை பேசி வருவதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம்
தவெக தலைவர் விஜய்-க்கு எவ்வளவு மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரது உயரம் என்ன என்று தெரியாமல் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் அதிமுக சார்பில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைப்பதாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முனுசாமி, குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதம் 2,000 வழங்கப்படும் என்று அறிவித்த பிறகு தோல்வி பயத்தால் திமுக அரசு தற்போது அறிவித்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் முதலாவதாக 2,000 ரூபாய் வழங்குவோம் என சொன்ன வாக்குறுதி மக்களை சென்றடைந்தது என்பதால், அவருக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுக தேர்தல் வாக்குறுதியால் நமக்கு பாதகம் ஏற்படும் என எண்ணி, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காமல் தற்போது அறிவித்துள்ளார் என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: சேலம் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி உயிரிழப்பு..! பேரதிர்ச்சி..!
தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் வருகையின் காரணமாகவே 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்ததற்கு, தவெக தலைவர் விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். அவருக்கு எவ்வளவு உயரம் உள்ளது, மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது தெரியாமல், நான்கு சுவற்றுக்குள் உக்கார்ந்து சில அறிவு ஜீவீகளை வைத்துக்கொண்டு, பணத்தை வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காத என அலைபவர்களை வைத்துக்கொண்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார்.. அவரை எல்லாம் நாம் கண்டுகொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் படத்தோட போஸ்டர் ஒட்டுனது குத்தமா?... தவெக இளைஞரை பொளந்தெடுத்த விஜயின் விழுதுகள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!