கை நழுவிய 15 வருட செண்டிமெண்ட்... காலியான எடப்பாடி பழனிசாமி... விடிந்ததுமே நடந்த அதிரடி மாற்றம்...!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்தார்.
அரசு இல்லத்தை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் காலி செய்திருக்கிறார்.எதிர்கட்சி தலைவராக கூட ஆக முடியாத நிலையில் அரசு இல்லத்தை இபிஎஸ் காலி செய்துள்ளார். அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவருக்கு மட்டுமே அரசு இல்லம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை எடப்படி பழனிசாமி இழந்திருக்கும் நிலையில், அரசு சார்பில் வழங்கப்பட்டிருக்கும் இல்லத்திலிருந்து வெளியேறியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே பல நாட்களாக வீடு தேடி வந்த சூழ்நிலையில் தற்பொழுது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு புதிய வீட்டிற்கு அவர் குடிபெயற இருக்கிறார். எனவே அதற்கான பால் காய்ச்சும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் வசித்து வந்தார். செவ்வந்தி என அழைக்கப்படும் அந்த இல்லத்தில் கடந்த 2011ஆண்டு முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!
2016ல் மீண்டும் அமைச்சரான போதும் அதே இல்லத்தில் தான் வசித்து வந்தார். அதற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற போதும் அதே வீட்டில் தான் வசித்து வந்தார். அதற்கு பிறகு 2021ல் அதிமுக எதிர்கட்சியான போது அவர் எதிர்கட்சி தலைவர் என்ற ஒரு அந்தஸ்து இருந்ததால் அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில அவர் மீண்டும் அதே இல்லத்தில் வசித்து வந்தார். அதே சமயம் அதிமுகவின் உடைய முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அமைச்சர் என்ற ஒரு அந்தஸ்தை இழந்துள்ளனர். எனவே அவர்களும் அரசு இல்லங்களை காலி செய்திருந்தார்கள். ஆனால் இவர் எதிர்கட்சி தலைவர் என்பதால் அதே இல்லத்தில் தொடர்ச்சியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. அதேபோல எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்திருந்தது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். இதற்கிடையே பல நாட்களாக வீடுகள் தேடி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்பொழுது அதிமுக அலுவலகம் அமைந்திருக்கக்கூடிய ராயப்பேட்டை அருகிலேயே சிறிது தொலைவிலேயே தெய்வசிகாமணி தெருவில் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். எனவே அந்த வீட்டிற்கு பால் காய்ச்சும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்று இருக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... உறுத்தலயா முதல்வரே..! EPS விளாசல்..!