நீங்களாம் ஒரு முதல்வர்? கிரிமினல்களின் சொர்க்க பூமி தமிழ்நாடு...! அதிமுக கடும் கண்டனம்..!
வட மாநில இளைஞர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான கௌரவ் குமார் என்பவர், தனது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயது குழந்தையுடன் சென்னைக்கு வேலை தேடி வந்திருந்தார். அவர் தரமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.இந்தக் குடும்பத்தினரை ஒரே நேரத்தில் கொலை செய்து, உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூம் அருகே சாலையோரத்தில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூட்டையைத் திறந்து பார்த்த போலீசார், கௌரவ் குமாரின் சடலத்தைக் கண்டனர். அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் இருந்தன. அவரது பாக்கெட்டில் இருந்து கிடைத்த தொலைபேசி எண்களை வைத்து அடையாளம் கண்டறிந்த போலீசார், அவரது மனைவியும் குழந்தையும் காணாமல் போயிருப்பதை அறிந்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த மூட்டையை வீசியதைப் பார்த்தனர். அந்த வாகனத்தைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கௌரவ் குமாருக்கு தெரிந்தவர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர். சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள் கிடைத்தன.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பா? மீண்டும் மீண்டும் பொய் பேசும் முதல்வர்..! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!
கௌரவ் குமாரின் மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையையும் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாகவும் போதை பொருட்களின் புழக்கத்தால் தான் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. 24 வயதில் இரண்டு வயது அழகான குழந்தையுடன் எவ்வளவு கனவுகளை சுமந்து தன்னுடைய சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காக அந்த குடும்பம் தமிழ்நாட்டை தேடி வந்திருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. உங்க கனவுகளை சொல்லுங்க என விளம்பரம் செய்ய தெரிந்த பொம்மை முதல்வர் ஆட்சியில் அவர்களது கனவுகள் எல்லாம் மண்ணோடு மண்ணாய் போனதுதான் மிச்சம் என்று சாடியது. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியது மட்டும்தான் இந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்த ஒரே சாதனை என்றும் தமிழ்நாட்டிற்கு நீங்கள்தான் முதல்வர் என்றும் நீங்களெல்லாம் முதல்வர்… எனவும் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த விஜயபாஸ்கரின் காளை ... EPS உற்சாகம்..!