பூசணி தோட்டத்தையே சோத்துல மறைக்கப் பாக்குறாங்க… திமுகவை விளாசிய அதிமுக எம்.பி…!
பூசணி தோட்டத்தையே சோற்றில் மறைக்க பார்ப்பதாக திமுக மீது அதிமுக எம்.பி இன்பதுரை குற்றம் சாட்டினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவிற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை வரவேற்பு தெரிவித்தார். விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் உயிரிழப்புகள் தமிழகத்தையே உலுக்கியது. தனிநபர் ஆணைய விசாரணை அமைத்து தமிழக அரசும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றி கழகமும், சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
அது மட்டுமல்லாது ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் குழு ஒன்றும் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாகவும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடர்பாக பேசிய அவர், தமிழக அரசு கூறிய பின்னர் அஸ்ரா கார்க் எப்படி முழுமையாக விசாரித்து உண்மையை கொண்டு வர முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!
பலியான 41 பேரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். முழு பூசணிக்காயை சோற்றில் மறக்கவில்லை மாறாக பூசணிக்காய் தோட்டத்தையே மறைக்க பார்க்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!