×
 
☰

லெட்டர் பேட் கட்சியா அதிமுக..? EPS குறித்து அவதூறு..! அமைச்சர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ்..!!

அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு அதிமுக சார்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எடப்பாடி பழனிச்சாமி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதிமுகவின் சொத்துகளைக் கைப்பற்ற அவர் முயற்சி செய்கிறார் என்றும், அவரது தலைமையில் அதிமுக லெட்டர் பேடு கட்சியாக மாறிவிட்டது என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிச்சாமியின் சுயநல அரசியல் காரணமாகவே கட்சி மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் பல முக்கிய தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திமுகவுடனான ரகசிய உறவு காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.இந்தக் கருத்துகளை அவதூறாகக் கருதிய அதிமுக, உடனடியாக சட்ட நடவடிக்கையில் இறங்கியது. கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான இன்பதுரை மூலமாக அமைச்சர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க: உண்மையான அதிமுக தொண்டர்கள் தவெக பக்கமா?... இபிஎஸுக்கு இடியை இறக்கிய அருண்ராஜ்...!

நோட்டீஸில், எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்பியதற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நஷ்டஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share