×
 

என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் மகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் என்று தகவல்கள் பரவிய நிலையில், யார் அந்த அண்ணன் என்று அதிமுக கேள்வியை முன் வைத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, கட்சியின் பனையூர் தலைமை அலுவலக வளாகம் புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெருங்கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், அலுவலகத்தின் முன் வளாகத்தில் ஏராளமானோர் நீண்ட நேரமாகக் காத்திருக்கும் காட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து த.வெ.க.வின் பனையூர் அலுவலகம் அரசியல் நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு நிர்வாகத்துக்கான தயாரிப்பு பணிகள், மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கொள்கை வகுப்பு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், பல்வேறு கட்சிகளிலிருந்து வரும் இணைப்புகள் அலுவலகத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளன. 

இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் மகளும் கட்சியில் இணைந்ததாக தகவல்கள் பரவின. மேனகா பாலகிருஷ்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் மகள் என்று தகவல்கள் பரவிய நிலையில் அதிமுக இதனை மறுத்துள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக்கோப்பை வென்றதாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்த நிகழ்வை சுட்டிக்காட்டி அதனுடன் எடப்பாடியின் அண்ணன் மகள் என்று கூறிய நிகழ்வையும் ஒப்பிட்டு அதிமுக விமர்சனம் செய்துள்ளது. யார் அந்த அண்ணன் என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, ஒரு அமைச்சர் முன்னின்று இப்படி ஒரு பொய்யை பரப்பலாமா? என்று கேட்டுள்ளது. This is also very wrong bro.. என்று தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share