×
 

பாமகவுடன் கூட்டணி... மார்தட்டிக்கொள்ளும் அதிமுக... கூட்டணிக்கே திண்டாட்டம் என திருமா விமர்சனம்..!

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது தொடர்பாக திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் களம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி விரைவாக மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. அண்மையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு, பாட்டாளி மக்கள் கட்சி., அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டணி அறிவிப்பு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் சந்தித்த பின்னர் வெளியானது.

இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து, இது இயற்கையான மற்றும் வெற்றிகரமான கூட்டணி என்று உறுதிப்படுத்தினர். தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய முடிவுற்றுள்ளதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டணி அறிவிப்பு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அணியை வலுப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. 

எனினும், இந்தக் கூட்டணி அறிவிப்பு பாமகவுக்குள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடனடியாக அறிக்கை வெளியிட்டு, அன்புமணியுடன் நடத்தப்பட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது என்று குற்றம்சாட்டினார். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோளிட்டு, கட்சியின் விதிப்படி தானே மட்டுமே கூட்டணி பேச உரிமையுள்ளவர் என்றும், அன்புமணியின் நடவடிக்கை செல்லாது என்றும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அது எப்படி முடியும்? ஜனநாயகனுக்கு மோடி அழுத்தம் தரல... வரிந்து கட்டி வந்த செல்லூர் ராஜு..!

இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். பாமகவிற்குள்ளேயே இன்னும் உட்கட்சி மோதல் தீர்ந்தபாடில்லை என்று விமர்சித்து உள்ளார். இந்தநிலையில், பாமக எங்கள் அணிக்கு வந்துவிட்டது என அதிமுக மார்தட்டிக்கொள்கிறது என தெரிவித்தார். அதிமுக - பாஜக தலைமையில் கூட்டணி அமைவதேற்கே திண்டாட்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார். அவர்களோடு ஏற்கெனவே பயணித்தவர்களே மீண்டும் இணைவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என திருமாவளவன் பேசியுள்ளார். 

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பிளவு..! தேமுதிக எங்க பக்கம் தான்... ராஜேந்திர பாலாஜி கணிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share