ஏமாற்றும் திமுக... 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கல... அதிமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்...!
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது.
இது ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவியது. அதிமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது, ஆனால் கொரோனா தொற்று பரவிய 2020ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அதிமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசு அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்திவிட்டதாக பலமுறை விமர்சித்தார். 2024ஆம் ஆண்டில் கூட, புதிய கல்வியாண்டு தொடங்கும் போது லேப்டாப் வழங்குவதற்கான அறிவிப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டி, மாணவர்களின் எதிர்பார்ப்பை திமுக அரசு ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார்.திமுக அரசு தரப்பில் இதற்கு பதிலளிக்கும் போது, கொரோனா காரணமாகவும் பொருளாதார சிரமங்கள் காரணமாகவும் அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்திலேயே இத்திட்டம் நிறுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தது. மேலும், திட்டத்தை மேம்படுத்தி மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியது.
இதையும் படிங்க: பெண் போலீஸ் கடத்தல் விவகாரம்... ஸ்டாலின் அரசின் கேரக்டர் இதுதான்... அதிமுக கண்டனம்..!
இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடி கணினி வழங்க வலியுறுத்தி அதிமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக மாணவர் அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு மடிகணினி வழங்க மறுக்கும் திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதையும் படிங்க: அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!