×
 

பகீர் கிளப்பிய கிட்னி முறைகேடு! இன்னும் நடவடிக்கை எடுக்கல... போராட்டத்தில் குதித்த அதிமுக

கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களது கிட்னியை விற்பனை செய்து உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது.

 முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்தது. அதன்படி தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டன. சிறுநீரக முறைகேடு விற்பனை தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் பட்சத்திலும் தனியார் மருத்துவமனை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: உதயநிதி சார்! சட்டம் ஒழுங்கே ICU-ல தான் இருக்கு… அதிமுக செம கலாய்..!

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள நான்கு ரோடு எம்ஜிஆர் சிலை அருகே கிட்னி திருட்டை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிட்னி முறை கேட்டில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் வளர்மதி, பரஞ்சோதி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துக் கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share