×
 

அம்மா உணவகத்தில் துளிக்கூட மெயின்டனன்ஸ் இல்ல..! திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து மே 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அம்மா உணவகங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அம்மா கூட கொஞ்சம் கலை திமுக அரசு பராமரிக்க ஏன் முன் வரவில்லை என்ற கேள்வியை முன் வைத்துள்ள நிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மே ஏழாம் தேதி கன்னடா ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே மே 7ஆம் தேதி காலை 9:30 மணிக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஆபாசப் பேச்சு..! பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்..!

எனவே அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓசூர் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share