×
 

விட்ருங்க… விட்ருங்க..! கதறிய நிருபர்… இரக்கமின்றி தாக்கிய MLA குரூப்..! அதிமுக கண்டனம்..!

நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிகார திமிரில் ஆட்டம் போடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என அதிமுக தெரிவித்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் தமிழக ஊடகத்துறையையும் அரசியல் வட்டாரத்தையும் பெரிதும் உலுக்கியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள ஒரு கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்றனர். இந்த குவாரி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தரப்புக்கு தொடர்புடையது என்றும், அங்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளை நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்திருந்தன.

இதுதொடர்பான தகவல்களை சேகரிக்கும் வகையில், கதிரவன் உள்ளிட்ட குழுவினர் சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கரூரில் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதை அறிந்து அதனை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை 50 பேர் கொண்ட குண்டர் படையுடன் சேர்ந்து நடுத்தெருவில் ரத்தம் சொட்டச் சொட்ட திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.

இதையும் படிங்க: கிரிமினல்களுக்கு ஆளுங்கட்சி அடைக்கலம்..! தீய சக்தி திமுகவை ஒடுக்குவோம்... இபிஎஸ் சூளுரை..!

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் மாடல் ஆட்சியா இல்லை ரவுடிகளின் ஆட்சியா என கேள்வி எழுப்பி உள்ளது. திமுக உறுப்பினர் என்பது எத்தகைய குற்றங்களையும் நிகழ்த்தலாம் என்பதற்கான அனுமதி சீட்டா என்றும் அதிகார திமிரில் ஆட்டம் போடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: வர்த்தக ஒப்பந்தம்..! சரித்திரத்தை சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி..! EPS வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share