×
 

பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

MLA-க்கள் பதவியை ராஜினாமா செய்தது குறித்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி விளக்கம் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை அதிமுகவுக்குள் உள்ள உட்கட்சி பூசல் மற்றும் எதிர்க்கட்சியின் உள் நிலைமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உள்ளானபோது, இந்த நான்கு பேரும் உள்ளிட்ட பல அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நடவடிக்கை அதிமுகவுக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியது. 

மே 25, 2026 அன்று மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகிய மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். அவர்களது ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதே நாள் மாலையில் அவர்கள் தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மறுநாள் மே 26 அன்று இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமாவை சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு தவெகவில் இணைந்தார். இந்த நான்கு பேரும் தொகுதி மக்களின் நலன்களை முன்னிட்டும், அதிமுகவில் நிலவும் உட்கட்சி முரண்பாடுகளை சுட்டிக்காட்டியும் தங்கள் முடிவை நியாயப்படுத்தினர். தங்கள் பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: “இபிஎஸ் அவர்களே... உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?” - எரிமலையாய் வெடித்த சி.வி.சண்முகம்...!

இந்த நிலையில், ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விளக்கம் அளிக்கும் நாள் முப்பதாம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என ஆகஸ்ட் 4ஆம் தேதி விளக்கம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அதிமுக சும்மா விடாது..! நீர் விநியோகத்தை பாதிக்கும் திட்டங்கள்... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி EPS காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share